Posts

பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க நினைக்கும் பத்து பழக்கங்கள்.

பிள்ளைகளுக்கு  சொல்லி வளர்க்க நினைக்கும் பத்து பழக்கங்கள் , 1. இனம், மதம், நிறம், பணம், சாதி  என்ற எதையும் வைத்து இன்னொருவரை எடை போடாதே. உன்னை யாரும் எடை போட்டால் அது அவனின் பிரச்சினை. கண்டுகொள்ளாதே. 2. நீ யாரையும் ரசி. யாருக்கும் விசிறியாக இரு. ஆனால் அதை ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடு. அவருக்காக இன்னொருவரோடு சண்டை போடாதே. அவரது படைப்புக்களை ரசிப்பது தவிர வேறு எதற்காகவும் ஒரு ரூபாய்கூட அவருக்காக செலவழிக்காதே. 3. பிழை என்று பொதுப்புத்திக்குத் தெரியும் எதையும் கலாச்சாராம் , பாரம்பரியம் என்பதற்காக மட்டும் செய்யாதே. 4. கடவுளுக்குப் பயந்து தப்புச்செய்யாமல் விடாதே. கடவுளுக்குப் பயந்து நல்லது செய்யாதே. அதற்கு கடவுள் தேவையில்லை. உன் மனச்சாட்சி போதும். 4. இந்த உலகத்தில் இதை பெண்கள் மட்டும்தான் செய்யனும், இதை ஆண்கள் மட்டும்தான் செய்யனும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உனது இருப்புக்குத்தேவையான உன்னால் செய்யமுடிந்த எதையும் நீ துணிந்து செய். 5. முதியவர்கள் என்பதற்காக அவர்கள் சொல்லும் எல்லாம் சரி என்று நீ ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. உனக்கு பிழை என்று தெரிந்தால் சரியானதை மட்டும் செய். ...

அண்மையில் காலமான மத்தேயஸ் அடிகளார்

Image
அண்மையில்  காலமான மத்தேயஸ்  அடிகளார் அறியப்படாத  ஒரு செய்தி இது -------------------------------------   யாழ்ப்பாணப்  பல்கலைக்க்ழகத்தில்  நான் 1980  களின்   ஆரம்பப் பகுதியில்  கற்பிக்க  ஆரம்பித்தேன், பல் கலைக் கழக  ஆசிரிய  அறையில்  சகல துறைகளையும்    சேர்ந்த  தலைவர்கள்  விரிவுரையாளர்கள்   தேநீர்  அருந்துவர்,  அதற்கு  அடுத்த  சிறிய  அறைதான் துண்கலைத் துறைக்கான் அறை   அதில் பாதியை    நிரப்பிகொண்டு  நுண்கலைத் துறைத் தலைவர்  பேராசிரியர்  சிவத்த்ம்பி  இருப்பார்   ஏனையமூன்று  மேசைகளில்  உதவி  விரிவுரை யாளர்கள் இருப்போம்,   ஆசிரிய  அறைக்கு  அருகில்   எமது  துறைக்கான   அறை   இருந்தமையினால்  அடிக்கடி  ஆசிரிய  அறை  செல்லும்  வாய்ப்பு எனக்குக் கிடைத்த்து .அச்சமயம்  பல புதிய  புதிய  நண்பர்க்ள்  எனக்குக் கிடைக்க...

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது!

Image
பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! -2 September 1, 2016 - வ.ந.கிரிதரன் - நித்தியின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெறத்தொடங்கின. 1970இல் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ‘தமிழ் பாப் 70’ என்னும் பெயரில் இசை நிகழ்ச்சியொன்றினை தினபதி பத்திரிகையில் பணி புரிந்த ஜெயசீலன் என்பவர் , சீதா பத்திரிகையினை அக்காலகட்டத்தில் நடத்திக்கொண்டிருந்த தமிழ் நெஞ்சன் என்பவருடன் இணைந்து நித்தி கனகரத்தினத்தின் பங்களிப்புடன் நடத்தினார்.  எஸ்.டி.துரைசாமி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த அப்துல் ஹமீட் மற்றும் புவனலோசனி வேலுப்பிள்ளை ஆகியோர் மேடைக்குப் பின்புறம் நின்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்வில் நிகழ்வு முழுவதும் நித்தி கனகரத்தினம் அவர்கள் ‘சின்ன மாமியே’ , ‘கள்ளுக்கடைப் பக்கம் போகாதே’ மற்றும் ‘ஊரே கெட்டுப் போச்சு’ ஆகிய மூன்று பாடல்களை மட்டுமே திருப்பித்திருப்பிப் பாடி இரசிகர்களைக் களிப்பிலாழ்த்தியதுதான். இரசிகர்களும் அவர் அவ்விதம் திரும்பத்திரும்பப் பாடுவதை வரவேற்று இரசித்தனர்....

புங்குடுதீவு பெற்ற மைந்தன் வழிதோன்றல்.. பேரன் Nasa அங்கமாக

Image
திருப்பூங்குடி ஆறுமுகம் திருப்பூங்குடி ஆறுமுகம் இலங்கையில்  எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர். புங்குடுதீவில் 7 ru for you you to do the trick for you guys I can you give a lot for me பகுதியில் பெரும் வணிகர் கந்தப்பு, அன்னப்பிள்ளை ஆகியோருக்கு மூத்த புத்திரனாகத் தோன்றியவர் திருப்பூங்குடி ஆறுமுகம் எனப் பின்பு பெயர் விளங்கிய கந்தப்பு ஆறுமுகம். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்த இவர், தனது அயராத உழைப்பினாலும், மனம் தளராத உறுதியினாலும், கல்வியில் உயர்ந்து, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரில் பயின்று, ஆசிரியராகப் பரிணமித்தார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சித்திரக்கலையினையும், கட்டிடக்கலையினையும் கற்றுத்தேர்ந்தார். இவர் கொழும்பு விவாகானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தன் சிறுவயதிலேயே நாடக்கலைய...

Refind ஆயில் இரகசியம்

தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை... இவை உண்மையில் உண்மையான விதை எண்ணைதானா?!!. ஜீம்.. பூம்... பா அவசியம் படிக்க வேண்டியதும் பகிர வேண்டியது...

கலிபோர்னியா வாழ் தமிழ் சகோதரி.

இந்த பதிவுக்கு சொந்தமான சகோதரி #cut to the chase. Face book page. This time, it's not an emotional outburst. You know how some of us have an alarm in our head that goes off when someone mispronounces a Tamil word, I am one of those people. So I decided to post a video that clarifies the difference in the pronunciation of Tamil alphabets that we often seem to have confusion in. This could be very familiar information for some of us... but I am hoping it might prove useful for those who want to understand the difference in the sounds. சமீபத்தில் ஒரு சின்னத்திரை பிரபலம் (பெயர் குறிப...

சாதி மத வேற்றுமை இடப்பெயர்வுகளின் பின்.

சாதி மத வேற்றுமை இன்றைய இணைய பயன்பாடு முன்னேற்றமடைந்த இக்காலத்தில் தலைதூக்கி இருக்கும் அல்ல மாறாக மேலெழுச்சி பெற்றுள்ள சாதி மத பதிவுகளை பற்றி இந்த கட்டுரை தொடர இருக்கிறது.. குறிப்பாக முகநூல் ஊடாக இளையோர் மற்றும் சில பிரபலங்களின் பதிவுகளை கொண்டே தொடரும் ஆயினும் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படாது. ஏனெனில் இந்த சாதி மத வேறுபாடுகளை ஊக்குவிப்பிற்கு துணையாக கூடா என்ற எண்ணம். இது இடப்பெயர்வு களின் பின்னர் தற்போது மீண்டும் சில தீய பிற்போக்கு சக்திகளின் மூலம் வளர்க்கப் படுகின்றன. யுத்த வடுக்கள் காரணமாக தமிழினம் கண்ட துன்பியல் சம்பவங்கள் காரணமாக மறைந்து போன இந்த சாதி மத வெறி மீண்டும் துளிர் விட தொடங்கியுள்ளது. அவரவர் தம் தொழில் நிமித்தம் கொண்டுள்ள பண்புகள் பழக்கவழக்கம் ஏனையவரால் மதிக்கப்படவேண்டும். நகைக்க பட வேண்டியது அல்ல. கல்வியில் 90% க்கு மேல் வளர்ச்சி கண்ட இந்த இலங்கை நாட்டில் மிக சொற்ப அளவு கொண்ட இனக்குழு இவ்வாறு பலவ்வாறாக பிரிந்து கிடப்பது வருந்த தக்க ஒன்றாகும். இது ஒட்டுமொத்த ஈழ மக்களின் அரசியல் சமூக அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்படுத்த கூடியது. இதுவே இளம் சமுதாயத்தில் கருத...