பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க நினைக்கும் பத்து பழக்கங்கள்.


1. இனம், மதம், நிறம், பணம், சாதி  என்ற எதையும் வைத்து இன்னொருவரை எடை போடாதே. உன்னை யாரும் எடை போட்டால் அது அவனின் பிரச்சினை. கண்டுகொள்ளாதே.

2. நீ யாரையும் ரசி. யாருக்கும் விசிறியாக இரு. ஆனால் அதை ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடு. அவருக்காக இன்னொருவரோடு சண்டை போடாதே. அவரது படைப்புக்களை ரசிப்பது தவிர வேறு எதற்காகவும் ஒரு ரூபாய்கூட அவருக்காக செலவழிக்காதே.

3. பிழை என்று பொதுப்புத்திக்குத் தெரியும் எதையும் கலாச்சாராம் , பாரம்பரியம் என்பதற்காக மட்டும் செய்யாதே.

4. கடவுளுக்குப் பயந்து தப்புச்செய்யாமல் விடாதே. கடவுளுக்குப் பயந்து நல்லது செய்யாதே. அதற்கு கடவுள் தேவையில்லை. உன் மனச்சாட்சி போதும்.

4. இந்த உலகத்தில் இதை பெண்கள் மட்டும்தான் செய்யனும், இதை ஆண்கள் மட்டும்தான் செய்யனும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உனது இருப்புக்குத்தேவையான உன்னால் செய்யமுடிந்த எதையும் நீ துணிந்து செய்.

5. முதியவர்கள் என்பதற்காக அவர்கள் சொல்லும் எல்லாம் சரி என்று நீ ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. உனக்கு பிழை என்று தெரிந்தால் சரியானதை மட்டும் செய்.

6. காதல், செக்ஸ் எல்லாம் தெய்வீகமானதில்லை. சாதாரண மனித உடலின் தேவைகள். அவற்றை தெய்வீகமென போற்றி பூசிமெழுக தேவையில்லை. 

7. இன்னொருவரிடம் இல்லாத ஒன்று உன்னிடம் இருப்பதால் நீ அவரை விட உயர்ந்தவர் இல்லை. அதேபோல் உன்னிடம் இல்லாத ஒன்று இன்னொருவரிடம் இருப்பதால் நீ அவரைவிட தாழ்ந்தவரில்லை.  யாரோடும் உன்னை ஒப்பிடாதே. தாழ்வு மனப்பான்மையில் இன்னொருவரோடு பொறாமைப் படாதே.

8. எல்லோரும் உன்னை நல்லவர் என்று சொல்லனுமென எதிர்பார்க்காதே. அதற்காக எல்லோரோடும் சமாளிச்சுப் போகனுமென நினைக்காதே.  

9. 18 வயதானாதும் பெற்றோர் சேர்த்து வச்ச பணம் இருந்தாலும், உனக்குக் தேவையானதை நீ உழைக்கக் கூடிய வல்லமையை வளர்த்துக்கொள். வாழ்க்கை எப்போதும் மாற்றமடையலாம். அப்போது நீ சொந்தக் காலில் நிற்கும் தகுதி வேண்டும்.

10. உனக்கு பிடித்த துறையை தெரிவு செய்யும்போது இரண்டு விடயத்தை மட்டும் கவனத்தில் கொள். ஒன்று உனக்கு அது பிடிக்க வேண்டும்.  இரண்டு அது நீ திருப்தியாக வாழத்தேவையான வருமானத்தை தரவேண்டும்.
இரண்டில் ஒன்று இல்லாது போனாலும் அதை தெரிவு செய்யாதே. By Dr.  Sivachandran sivagnanam

Comments

Popular posts from this blog

கலிபோர்னியா வாழ் தமிழ் சகோதரி.

சாதி மத வேற்றுமை இடப்பெயர்வுகளின் பின்.

புங்குடுதீவு பெற்ற மைந்தன் வழிதோன்றல்.. பேரன் Nasa அங்கமாக