அண்மையில் காலமான மத்தேயஸ் அடிகளார்
அண்மையில் காலமான மத்தேயஸ் அடிகளார்
அறியப்படாத ஒரு செய்தி இது
-------------------------------------
யாழ்ப்பாணப் பல்கலைக்க்ழகத்தில் நான் 1980 களின் ஆரம்பப் பகுதியில் கற்பிக்க ஆரம்பித்தேன், பல் கலைக் கழக ஆசிரிய அறையில் சகல துறைகளையும் சேர்ந்த தலைவர்கள் விரிவுரையாளர்கள் தேநீர் அருந்துவர்,
அதற்கு அடுத்த சிறிய அறைதான் துண்கலைத் துறைக்கான் அறை
அதில் பாதியை நிரப்பிகொண்டு நுண்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் சிவத்த்ம்பி இருப்பார்
ஏனையமூன்று மேசைகளில் உதவி விரிவுரை யாளர்கள் இருப்போம்,
ஆசிரிய அறைக்கு அருகில் எமது துறைக்கான
அறை இருந்தமையினால் அடிக்கடி ஆசிரிய அறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த்து
.அச்சமயம் பல புதிய புதிய நண்பர்க்ள் எனக்குக் கிடைக்க ஆரம்பித்தார்கள் அவர்களில் பலர் இன்று இல்லை
அப்படி அங்கு கிடைத்த அருமையான நண்பர்களில் ஒருவர்தான் இந்த மத்தாயஸ் அடிகளார்
நீண்ட வெள் அங்கி
ஓர் புன் சிரிப்பு
பிரகாசமான முகம்
இவற்றுடன் அவர் எனக்கு அறிமுகமானார்.
அந்தப் புன் சிரிப்பே அவரது அடையாளம்.,
இளவயதினர் கலகலப்பாகப் பேசுவார், எவருக்கும் உதவி புரிவதில் முன் நிற்பார்
நான் அப்போது திருநெல்வேலியில் தபால்பெட்டி ஒழுங்கை என அன்று அழைக்கப்பட்ட ஒழுங்கை சென்று முடிவடைகின்ற இடத்தில் இருந்தேன். அது ஈழத்தின் தமிழ்சிறுகதை மூன்னோடிகளுள் ஒருவரான எழுத்தாளர் வைத்திலிங்கத்தின் மகளின் வீடு.
புது வீடு.
வீட்டின் சொந்தக் காரர்கள் கனடாவில் இருந்தார்கள்.
வைத்திலிங்கம் இடைக்கிடை நாம் இருந்த வீட்டுக்கு வந்து சித்ராவின் கையினால் தேநீர் அருந்திச் செல்வார்
கனடாவில் மகளைப்பிரிந்திருந்த அவர் சித்ராவை மகளாகவே கருதினார்
என் வீட்டுக்கருகில் எல்வின் ரட்ணம் நூல் நிலையம். இருந்தது
பேரா இந்திரபாலா ஆரம்பத்தில் அங்கு குடியிருந்தார்.
பின்னர் நூலகர் செல்வராஜாவும் அங்கு குடியிருந்தார்.
ஆருகில்தான் நடனக் கலைஞர் வேலானந்தன் வீடு
என் வீட்டின் பின் பிறம் நீண்ட வெளி
பின் மதில் மதிலுக்கு அப்பால் ஒரு கத்தோலிக்க தேவாலயம்.
அதனை கஸ்ட்ப்பட்டுக் கட்டி முடித்தவர் அருட் சகோதரர் மத்தேயஸ் அடிகளார்,
அவரை சைக்கிளிலோ நடையாகவோ அடிக்கடி என் வீதியில் காணுவேன்
ஆசிரியர் அறையில் அறிமுகமான பின் அவர் என் வீட்டை ஒரு நாள் அவர் கடந்து செல்கையில் அவரை நான் என் வீட்டின் முன் கண்ட நான் கதை பேசிய பின் தேநீர் அருந்த வீட்டுக்கு ஆழைத்தேன்
மறுப்பில்லாமல் அதே சிரித்த முகத்தோடு வந்தார்
உரையாடலில் அவர் பற்றியும் அவர் பணிகள் பற்றியும் அறிய வந்தேன்
அவரின் தங்கையைத்தான் எழுத்தாள நண்பர் பெனடிற் பாலன் திருமணம் செய்துள்ளார் என்ற சேதியும் தெரிய வந்தது
அடிகளாரின் கலை, இலக்கிய சமூக ஈடுபாடுகளும் தெரிய வந்தன
என்னுடன் நெருக்கமானார்
என் வீட்டுக்குப் பின்னால் இருந்த சேர்ச்சில் தான் அவர் குடியிருந்தார்
ஒரு முறை தான் வதிந்த அந்தசேர்ச்சுக்கு வரும்படி என்னை அழைத்தார், சென்று பார்த்தேன் பெரு வியப்பளித்த சேர்ச் அது
மிகுந்த கலை யழகோடு ன் அது அமைக்கப்ப்ட்டிருந்த்து
அது அவரது ரசனையைக் காட்டியது
அக்கால கட்டத்தில்தான் என்னிடம் இன்றைய கலாநிதிகளும் பல்கலைக்க்ழக விரிவுரை யாளர்களுமான
ஶ்ரீ கணேசன்
ஜெயசங்கர்
பா. அகிலன் அகியோரும்
மற்றும்
செல்வகுமார்( இன்றைய பிரபல நாடக அரங்கியல் ஆசிரியர்)
,குமரகுருபரன் ( தமிழ் குளோபல் செய்தி ஆசிரியர்)
முரளி( இசையமைபாளர் கண்ணன் மகன்)
இன்னும் பலரும் என் வீட்டுக்கு வந்து கூத்துப் பயிற்சி பெற்றுகொண்டிருந்தனர்
என் மகன் சித்தார்த்தனுக்கு அப்போது 15 வயது அவனும் இணைந்து கொண்டான்
பயிற்சியின் முடிவில்
அலாரிப்பு
வர்ணம்
சப்தம்
பதம்
என ஒழுங்கு முறைப்படுத்தி அளிக்கப்படும் பரதக் கச்சேரி போல
அரசர் ஆட்டம்
அரசி ஆட்டம்
தேர் ஆட்டம்
வீரர் ஆட்டம்
குதிரை ஆட்டம்
கிழவி ஆட்டம்
என கூத்தின் ஆட்டங்களை ஓர் ஒழுங்குக்குள் அமைத்து மேடையிடும் திட்டமும் இருந்தது
ஏறத்தாள 15 மாணவர் என ஞாபகம்
சில வேளைகளில் தினமும் பயிற்சி நடக்கும்
வடமோடி தென்மோடி ஆட்டங்கள் பயிற்றப்பட்டன
சனி ஞாயிறு தினங்களில்தான் காலையிலிருந்து மதியம் வரை பயிற்சி நடைபெறும்
கிழமை நாட்களில் வரும் சிலர் காலை 5,30க்கு வந்து விடுவர்
பயிற்சி 7,30 வரை இடம் பெறும்
பாட்டுச்சத்தம் வெளியில் கேட்கும் ஆட்டத் தாளம் சொற்கட்டுகளும் கேட்கும். அயலில் இருந்தவர்கள் வினோதமாக பார்த்திருக்கவும் கூடும் என இப்போது எண்னுகிறேன்
நாங்கள் எவரைப்பற்றியும் கவலைப்படவில்லை
நான் இருந்த வீட்டு முற்றம் எமது வீட்டின் அந்த பெரிய முன் ஹால் என்பன பழகும் இடங்கள்.
ஆனால் கால் கைகளை வீசி ஆடிப்பழக அவை போதாது
அகன்ற இடம் கிடைத்தால் நன்றாயிருக்கும் எனப் பேசிகொள்வோம்
ஒரு நாள் ஆசிரிய அறையில் பேசிக்கொண் டிருக் கையில் அடிகளார் என்னிட்ம்
நான் உங்கள் வீட்டினைக் கடக்கும்போது வீட்டிலிருந்து பாடல் சத்தம் கேட்கும் பலர் சேர்ந்து ஏதோ செய்வதும் கேட்கும் அது என்ன என்று அதே புன் சிரிப்புடன் கேட்டார்
நான் மட்டக்களப்பின் கூத்து ஆடல் முறையினை வகைகளை அவருக்குவிளக்கி
நமது ஈழத் தமிழர் தமது ஆட்டமுறைகளை மறந்து விட்டனர் ஒரு காலத்தில் இவ் ஆட்டமுறைகள் யாழ்ப்பாணத்தில் இருந்தன, அவை இப்போது இல்லை பாடல் மட்டுமே எஞ்சியுளது ஆனால் மட்டக்களப்பில் இன்றும் இந்த ஆட்டமுறைகள் கிராம மக்களால் பேணப்படுகின்றன அவை அங்கு ஆடவும் படுகின்றன, அவற்றைப் பரவலாக தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சியிலீடு படுகி றோம்
’என்றேன்
பெரிதும் வியப்படைந்த அவர்
நான் இதற்கு என்ன உதவி செய்யலாம்
எனக் கேட்டார்
நான் அவரிடம் நாம் எதிர்கொள்ளும் இட நெருக்கடி பற்றிக் கூறினேன்
எமது சேர்ச் மண்டபத்தில் வந்து பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் என இயல்பாகக் கூறினார்
இடம் தேடிகொண்டிருந்த எனக்கு இது ஓர் இனிப்பான செய்தியாயிற்று
அடுத்தவாரம் மத்தயாஸ் அடிகளாரின் சேர்ச்சில் எம் பயிற்சிகள் ஆரம்பமாயின
மிக வசதியான இடமாகையினால் பாய்ந்து ஆடி ஓடி பயிற்சி பெற மிக வசதியாக இருந்தது
அடிகளாரும் இடையிடை வந்து பார்ப்பார்
ரசிப்பார் எனக்குச் சில ஆலோசனைகளும் கூறுவார்
அந்த பயிற்சி நெறி ஒரு ஆற்றுகை வடிவமாக உருவெடுத்தது
நாம் நினைத்தபடி கூத்து ஆட்ட முறைகளை ஓர் ஒழுங்குக்குள் வரிசைக்குள் கொணர்ந்து ஓர் ஆற்றுகையாக அளித்தோம்
அளித்த இடம் அச்சுவேலி சென் திரேஸாக் கல்லூரி அங்கு அதனை ஒழுங்கு செய்து தந்தவர் அங்கு அதிபராகப் பணி புரிந்த அருட் சகோதரி எலிஸபெத் அவர்கள்
பின்னர் இராம நாதன் நுண்கலைத்துறை நடன மாணவிகள் சிலரும் இப் பயிற்சியில் இணைந்தனர்,
அவர்களின் பயிற்சி பெற்ற உடலுக்கூடாக கூத்துப் புறப்பட்டு வருகையில் மிக மிக அழகாக அது இருந்தது
பின்னர் இந்த நிகழ்வு பேரா.சிவத்தம்பி தலைமை தாங்கிச்செல்ல கொழும்பிலும் மேடையேறியது
அதனைக் கண்ட கொழும்புவாழ் சிங்கள மக்களும் தமிழ் மக்களும்
இது என்ன நடனம்
எனக் கேட்டனர்
நாம் அங்கு எம்மைக் கேட்ட சிங்களக் கலைஞர் களிடம்
உங்களிடம் உடரட்ட பாதரட்ட என இரு பெரு நடன மரபுகள் இருப்பது போல ஈழத் தமிழரிடமும் பரதம், கூத்து என் அமிகப்பெரிய நடன வடிவங்கள் உள்ளன
என பதில் கூறினோம்
அவர்கள் வியப்புடன் எம் பதிலைசெவி மடுத்தனர்
இத்தகைய ஒரு பெரு விடயத்திற்குச் சரியான் நேரத்தில் இடம் தந்து ஊக்குவித்து உதவியும் புரிந்தவர் அருட் தந்தை மத்தயாஸ் அடிகளார்
அறியப்படாத இந்தசெய்தியை அவர் காலமான இக்காலப்பகுதியில் இங்கு பதிவு செய்தல் அவசியம் எனக் கருதுகிறேன்
மிக மிக காத்திரமான பணிகளை அமைதியாக ஆற்றிவிட்டுச் சென்ற பலரது பெயர்களை வரலாறு மறந்து விடுகிறது
மறக்க முடியாத மனிதர் மத்தேயாஸ் அடிகளார்
மறக்க முடியாத சிரிப்பு அவரது புன் சிரிப்பு.
Comments
Post a Comment