Posts

Showing posts from August, 2022

பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க நினைக்கும் பத்து பழக்கங்கள்.

பிள்ளைகளுக்கு  சொல்லி வளர்க்க நினைக்கும் பத்து பழக்கங்கள் , 1. இனம், மதம், நிறம், பணம், சாதி  என்ற எதையும் வைத்து இன்னொருவரை எடை போடாதே. உன்னை யாரும் எடை போட்டால் அது அவனின் பிரச்சினை. கண்டுகொள்ளாதே. 2. நீ யாரையும் ரசி. யாருக்கும் விசிறியாக இரு. ஆனால் அதை ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடு. அவருக்காக இன்னொருவரோடு சண்டை போடாதே. அவரது படைப்புக்களை ரசிப்பது தவிர வேறு எதற்காகவும் ஒரு ரூபாய்கூட அவருக்காக செலவழிக்காதே. 3. பிழை என்று பொதுப்புத்திக்குத் தெரியும் எதையும் கலாச்சாராம் , பாரம்பரியம் என்பதற்காக மட்டும் செய்யாதே. 4. கடவுளுக்குப் பயந்து தப்புச்செய்யாமல் விடாதே. கடவுளுக்குப் பயந்து நல்லது செய்யாதே. அதற்கு கடவுள் தேவையில்லை. உன் மனச்சாட்சி போதும். 4. இந்த உலகத்தில் இதை பெண்கள் மட்டும்தான் செய்யனும், இதை ஆண்கள் மட்டும்தான் செய்யனும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உனது இருப்புக்குத்தேவையான உன்னால் செய்யமுடிந்த எதையும் நீ துணிந்து செய். 5. முதியவர்கள் என்பதற்காக அவர்கள் சொல்லும் எல்லாம் சரி என்று நீ ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. உனக்கு பிழை என்று தெரிந்தால் சரியானதை மட்டும் செய். ...