அண்மையில் காலமான மத்தேயஸ் அடிகளார்
அண்மையில் காலமான மத்தேயஸ் அடிகளார் அறியப்படாத ஒரு செய்தி இது ------------------------------------- யாழ்ப்பாணப் பல்கலைக்க்ழகத்தில் நான் 1980 களின் ஆரம்பப் பகுதியில் கற்பிக்க ஆரம்பித்தேன், பல் கலைக் கழக ஆசிரிய அறையில் சகல துறைகளையும் சேர்ந்த தலைவர்கள் விரிவுரையாளர்கள் தேநீர் அருந்துவர், அதற்கு அடுத்த சிறிய அறைதான் துண்கலைத் துறைக்கான் அறை அதில் பாதியை நிரப்பிகொண்டு நுண்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் சிவத்த்ம்பி இருப்பார் ஏனையமூன்று மேசைகளில் உதவி விரிவுரை யாளர்கள் இருப்போம், ஆசிரிய அறைக்கு அருகில் எமது துறைக்கான அறை இருந்தமையினால் அடிக்கடி ஆசிரிய அறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த்து .அச்சமயம் பல புதிய புதிய நண்பர்க்ள் எனக்குக் கிடைக்க...