புங்குடுதீவு பெற்ற மைந்தன் வழிதோன்றல்.. பேரன் Nasa அங்கமாக
திருப்பூங்குடி ஆறுமுகம் திருப்பூங்குடி ஆறுமுகம் இலங்கையில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர். புங்குடுதீவில் 7 ru for you you to do the trick for you guys I can you give a lot for me பகுதியில் பெரும் வணிகர் கந்தப்பு, அன்னப்பிள்ளை ஆகியோருக்கு மூத்த புத்திரனாகத் தோன்றியவர் திருப்பூங்குடி ஆறுமுகம் எனப் பின்பு பெயர் விளங்கிய கந்தப்பு ஆறுமுகம். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்த இவர், தனது அயராத உழைப்பினாலும், மனம் தளராத உறுதியினாலும், கல்வியில் உயர்ந்து, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரில் பயின்று, ஆசிரியராகப் பரிணமித்தார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சித்திரக்கலையினையும், கட்டிடக்கலையினையும் கற்றுத்தேர்ந்தார். இவர் கொழும்பு விவாகானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தன் சிறுவயதிலேயே நாடக்கலைய...