சாதி மத வேற்றுமை இடப்பெயர்வுகளின் பின்.
சாதி மத வேற்றுமை இன்றைய இணைய பயன்பாடு முன்னேற்றமடைந்த இக்காலத்தில் தலைதூக்கி இருக்கும் அல்ல மாறாக மேலெழுச்சி பெற்றுள்ள சாதி மத பதிவுகளை பற்றி இந்த கட்டுரை தொடர இருக்கிறது.. குறிப்பாக முகநூல் ஊடாக இளையோர் மற்றும் சில பிரபலங்களின் பதிவுகளை கொண்டே தொடரும் ஆயினும் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படாது. ஏனெனில் இந்த சாதி மத வேறுபாடுகளை ஊக்குவிப்பிற்கு துணையாக கூடா என்ற எண்ணம். இது இடப்பெயர்வு களின் பின்னர் தற்போது மீண்டும் சில தீய பிற்போக்கு சக்திகளின் மூலம் வளர்க்கப் படுகின்றன. யுத்த வடுக்கள் காரணமாக தமிழினம் கண்ட துன்பியல் சம்பவங்கள் காரணமாக மறைந்து போன இந்த சாதி மத வெறி மீண்டும் துளிர் விட தொடங்கியுள்ளது. அவரவர் தம் தொழில் நிமித்தம் கொண்டுள்ள பண்புகள் பழக்கவழக்கம் ஏனையவரால் மதிக்கப்படவேண்டும். நகைக்க பட வேண்டியது அல்ல. கல்வியில் 90% க்கு மேல் வளர்ச்சி கண்ட இந்த இலங்கை நாட்டில் மிக சொற்ப அளவு கொண்ட இனக்குழு இவ்வாறு பலவ்வாறாக பிரிந்து கிடப்பது வருந்த தக்க ஒன்றாகும். இது ஒட்டுமொத்த ஈழ மக்களின் அரசியல் சமூக அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்படுத்த கூடியது. இதுவே இளம் சமுதாயத்தில் கருத...